Wednesday, March 4, 2009

கொஞ்சம் கிறுக்கல் 5

"செல்ல கோபம்" என்றால் என்ன என்று
நீ கேட்டதற்கு "தெரியாது" என்று
பதில் உரைத்தேன்..
கோபப்பட்டு முறைக்கிறாய் நீ..
அப்போதுதான் தெரிந்தது
"செல்ல கோபம்" என்பது
தேவதைகளின் மொழி என்று..

----------------------------------------------
அந்தி வானம் சிவக்கும் போதெல்லாம்
வெட்கப்படும் நொடிகளில் சிவக்கும்
உன் குட்டி கன்னங்களை விட
அதிகமாக சிவக்குமா என்று
சில முறை பார்ப்பதுண்டு..
பாவம் அந்த வானம்.
ஒவ்வொரு முறையும் தோற்றே போகிறது..

----------------------------------------------
மலர்ந்து வாடும் மலரும் இல்லை..
மலர் தேடும் வண்டும் இல்லை..
தூண்டிலில் சிக்கும் மீனும் இல்லை..
தொலைவில் ஒளிரும் நட்சத்திரமும் இல்லை..
எப்போதும் குறும்பு மின்னும்
உன் கண்களை எதனோடு ஒப்பிடுவது?

----------------------------------------------
"முதிய பருவத்தில் மனிதன்,
மீண்டும் குழந்தையாக மாறுவான்"
யாரோ சற்று தவறாக சொன்னது இது..
23 வயது குழந்தை நீ,
பழிப்பு காட்டி சிரிக்கும்போது
26 வயதில் மீண்டும் நான்
குழந்தையாகி போகிறேன்..

----------------------------------------------

2 comments:

  1. CHO CHWEET!
    Mukiamaaa last kavithai...evalavu unmai theriyumaa

    ReplyDelete
  2. அனைத்துமே அருமையா இருக்கு வெங்கடேஷ்...!! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete