Saturday, March 14, 2009

கொஞ்சம் கிறுக்கல் 6

ஆயிரம் பெங்குவின்களின் நடுவில்
தன் தாய் பெங்குவினை மட்டும்
சரியாக கண்டுபிடிக்குமாம்,
குட்டி பெங்குவின்..
லட்சம் பெண்களுக்கு நடுவே
என் கண்கள் உன்னை மட்டும்
அழகாக கண்டுபிடிக்கிறதே..
யாரடி நீ மோகினி?

----------------------------------------------
தெளிந்த நீரை, பால் போல
மாற்றுமாம் 'கார்பன்-டை-ஆக்சைடு'..
கள்(ள) மனதையும் பசும்பால் போல
தூயதாக மாற்றும் புதிய வகை
'ஆக்சிஜன்' நீ தானடி..

----------------------------------------------
புயல் வீசினாலும்
அமைதி காக்கும்
சிறு குளமாய் இருந்தவன்,
அனுதினம் ஆர்ப்பரிக்கும்
அலை கடலாய் இன்று
உன் நினைவை சுமந்து..

----------------------------------------------
சாதாரணமாக நீ பேசும் போது கூறிய
எதோ அர்த்தம் புரியாத வரிகள் சில
வானவில்லாய் வந்து வட்டமிடும் போது
அதன் பொருள் அறிய விழைகிறேன்..

----------------------------------------------

No comments:

Post a Comment