Wednesday, January 14, 2009

படித்ததில் பிடித்தது

எங்கோ எப்போதோ படித்தது..

அழகானவை எல்லாம்
உன்னை ஞாபகப்படுத்துகின்றன..
உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாமே
அழகாகவே இருக்கின்றன..

----------------------------------------------------
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
----------------------------------------------------
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!

----------------------------------------------------
எத்தனையோ அழகான‌
பெண்களைப் பார்த்தும்
தடுமாறாத எனக்கு...
உன்னைப்
பார்த்ததும் என்
தடுமாற்றங்களும்
அழகாக இருக்கின்றன..
என்னடி செய்தாய் என்னை ?
----------------------------------------------------
என் வீட்டு வாசலில் அஞ்சல் பெட்டி..
புதிதாக ஏதும் அஞ்சல் வந்திருகின்றதா
என்று எட்டி பார்த்தேன்..
அசைவற்று கிடந்தது ஒரு சிறிய இறகு..
எந்தப் பறவை எழுதிச் சென்று இருக்கும்?
----------------------------------------------------
விளையாட ஆள் இல்லை..
சோகத்தில் பொம்மைகள்..
பள்ளியில் குழந்தை..
----------------------------------------------------
கோடை விடுமுறை..
மகிழ்ச்சியில் குழந்தைகள்..
கவலையில் பள்ளி காக்கைகள்..

Monday, January 12, 2009

கொஞ்சம் கிறுக்கல்

நான் உன்னை..
நினைத்து பார்க்கவும் நினைக்கவில்லை..
மறக்கவும் நினைக்கவில்லை..
இருப்பினும் தினம் பார்க்கும் எதோ ஒன்று
உன்னை நினைவூட்டி சென்று விடுகிறது..
அனுதினம் கரையை வருடி செல்லும்,
அலையை போல..
-------------------------------------------
கண்ணிமைக்கும் நொடியில்,
கடந்து செல்லும் அவளது
கயல்விழி கவனத்தை களவாடி செல்கிறது..
மலரில் இருந்து மதுரம் குடித்து செல்லும்
சிறிய வண்ணத்துப்பூச்சியை போல..
-------------------------------------------
பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
இங்கே வழக்காடுகிறார்கள்..
என் கவிதை உணர்வையே..
களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

-------------------------------------------
காதலில் விழுந்தால் கவிதை வருமாம்..
காதலில் தோற்றால் தத்துவம்/ஞானம் வருமாம்..
நான் விழவும் இல்லை.. தோற்கவும் இல்லை..
எனக்கேன் வருகிறது??
எல்லா கேள்விக்கும், விடை இருந்தே ஆக வேண்டுமா என்ன?
(கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது.. :-) )