Tuesday, February 17, 2009

கொஞ்சம் கிறுக்கல் 3

பகலை விட
நிலவொளியில் தாஜ்மஹால்
மிக அழகாக தெரியுமாம்..
அந்தி சாய்ந்த ஒரு பொழுதில்,
அலைபேசி திரைஒளியில்,
உன் அழகுமுகம் கண்ட பிறகு
நம்பாமல் இருக்க முடியவில்லை..

----------------------------------------------
வண்ண கோல போட்டிக்கு
நீ கோலமிடுகையில்
உன்னை கண்ட பிறகு,
கோலம் மெதுவாக சொன்னது,
"இதுதான் கோலமயில் போல"
----------------------------------------------
நான் கவிதை சொல்லும்போது
கதை கேக்கும் சுட்டி சிறுமி போல
கண் சிமிட்டாது பாக்கிறாய்..
அது வரை தள்ளி நின்ற கவிதைகள்
என்னை நோக்கி ஓடி வருகின்றன..
----------------------------------------------
எல்லோரிடமும் சிறிது பேசும் நீ,
என்னை கண்டதும் மௌனமாகும்போது
கண்ணுக்கு புலப்படாத,
எதோ ஒன்று நம்மை பார்த்து,
சிரிக்க தொடங்குகிறது..
அது என்னவென்று..
உனக்கும் தெரியவில்லை..
ஏன் சிரிக்கின்றது என்று
எனக்கும் புரியவில்லை..

----------------------------------------------

3 comments:

  1. \\அலைபேசி திரைஒளியில்,
    உன் அழகுமுகம் கண்ட பிறகு
    நம்பாமல் இருக்க முடியவில்லை..\\

    நல்லா சொல்லியிருக்கீங்க ...

    ReplyDelete
  2. \\அது வரை தள்ளி நின்ற கவிதைகள்
    என்னை நோக்கி ஓடி வருகின்றன..\\

    வாவ்! அருமைங்க ...

    ReplyDelete
  3. \\எல்லோரிடமும் சிறிது பேசும் நீ,
    என்னை கண்டதும் மௌனமாகும்போது
    கண்ணுக்கு புலப்படாத,
    எதோ ஒன்று நம்மை பார்த்து,
    சிரிக்க தொடங்குகிறது..
    அது என்னவென்று..
    உனக்கும் தெரியவில்லை..
    ஏன் சிரிக்கின்றது என்று
    எனக்கும் புரியவில்லை..\\

    நல்ல உணர்ச்சி

    ReplyDelete