Monday, January 12, 2009

கொஞ்சம் கிறுக்கல்

நான் உன்னை..
நினைத்து பார்க்கவும் நினைக்கவில்லை..
மறக்கவும் நினைக்கவில்லை..
இருப்பினும் தினம் பார்க்கும் எதோ ஒன்று
உன்னை நினைவூட்டி சென்று விடுகிறது..
அனுதினம் கரையை வருடி செல்லும்,
அலையை போல..
-------------------------------------------
கண்ணிமைக்கும் நொடியில்,
கடந்து செல்லும் அவளது
கயல்விழி கவனத்தை களவாடி செல்கிறது..
மலரில் இருந்து மதுரம் குடித்து செல்லும்
சிறிய வண்ணத்துப்பூச்சியை போல..
-------------------------------------------
பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
இங்கே வழக்காடுகிறார்கள்..
என் கவிதை உணர்வையே..
களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

-------------------------------------------
காதலில் விழுந்தால் கவிதை வருமாம்..
காதலில் தோற்றால் தத்துவம்/ஞானம் வருமாம்..
நான் விழவும் இல்லை.. தோற்கவும் இல்லை..
எனக்கேன் வருகிறது??
எல்லா கேள்விக்கும், விடை இருந்தே ஆக வேண்டுமா என்ன?
(கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது.. :-) )

4 comments:

  1. //கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது//

    சூப்பர் கவித சார். பின்னிட்டீங்க :)

    ReplyDelete
  2. kirukkalum nallavey irukkuthu:))

    ReplyDelete
  3. \பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
    இங்கே வழக்காடுகிறார்கள்..
    என் கவிதை உணர்வையே..
    களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
    எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?\\


    Excellent:))

    Keep writing Venkatesh!

    ReplyDelete
  4. கிஷோர்-கும் திவ்யாவுக்கும் நன்றிகள் பல.. :)
    அப்படியே அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு போங்க..

    ReplyDelete