நான் மனதில் நினைத்து
உன்னிடம் சொல்ல வருவதை,
சொல்லும் முன்பே கண்டு பிடிக்கிறாயே..
கணிப்பொறி அறிவியல் மாணவி,
உனக்கு யார் "உளவியல்" கற்று தந்தது??
---------------------------------------------- "என்னை பற்றி என்ன தெரியும்?" என்ற
உனது கேள்விக்கு எனது பதில்
"எதுவும் தெரியாது. உன்னைத் தவிர..
அதனால் என்ன? உன்னையும் என்னையும்
ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த
கடவுளுக்குத்தான் எல்லாமே தெரியுமே!!"
ஆயிரம் பெங்குவின்களின் நடுவில் தன் தாய் பெங்குவினை மட்டும் சரியாக கண்டுபிடிக்குமாம், குட்டி பெங்குவின்.. லட்சம் பெண்களுக்கு நடுவே என் கண்கள் உன்னை மட்டும் அழகாக கண்டுபிடிக்கிறதே.. யாரடி நீ மோகினி? ---------------------------------------------- தெளிந்த நீரை, பால் போல மாற்றுமாம் 'கார்பன்-டை-ஆக்சைடு'.. கள்(ள) மனதையும் பசும்பால் போல தூயதாக மாற்றும் புதிய வகை 'ஆக்சிஜன்' நீ தானடி.. ---------------------------------------------- புயல் வீசினாலும் அமைதி காக்கும் சிறு குளமாய் இருந்தவன், அனுதினம் ஆர்ப்பரிக்கும் அலை கடலாய் இன்று உன் நினைவை சுமந்து.. ---------------------------------------------- சாதாரணமாக நீ பேசும் போது கூறிய எதோ அர்த்தம் புரியாத வரிகள் சில வானவில்லாய் வந்து வட்டமிடும் போது அதன் பொருள் அறிய விழைகிறேன்.. ----------------------------------------------
இன்று உலக மகளிர் தினமாம்..
எப்படி உன்னை வாழ்த்துவது..
"தேவதைகள் தினம்" என்றைக்கு என்று
தேடிக் கொண்டு இருக்கின்றேன்..
தெரிந்தால் நிச்சயம் நேரில் வந்து
வாழ்த்தி செல்வேன்..
இந்த கவிதையை படித்து,
நீ நல்லா இருக்கு என்றதும்
என்னை விட உயரமாய்
துள்ளி குதிக்கிறது
குட்டி கவிதை..
"செல்ல கோபம்" என்றால் என்ன என்று
நீ கேட்டதற்கு "தெரியாது" என்று
பதில் உரைத்தேன்..
கோபப்பட்டு முறைக்கிறாய் நீ..
அப்போதுதான் தெரிந்தது
"செல்ல கோபம்" என்பது
தேவதைகளின் மொழி என்று..
---------------------------------------------- அந்தி வானம் சிவக்கும் போதெல்லாம்
வெட்கப்படும் நொடிகளில் சிவக்கும்
உன் குட்டி கன்னங்களை விட
அதிகமாக சிவக்குமா என்று
சில முறை பார்ப்பதுண்டு..
பாவம் அந்த வானம்.
ஒவ்வொரு முறையும் தோற்றே போகிறது..
----------------------------------------------
மலர்ந்து வாடும் மலரும் இல்லை..
மலர் தேடும் வண்டும் இல்லை..
தூண்டிலில் சிக்கும் மீனும் இல்லை..
தொலைவில் ஒளிரும் நட்சத்திரமும் இல்லை..
எப்போதும் குறும்பு மின்னும்
உன் கண்களை எதனோடு ஒப்பிடுவது?
----------------------------------------------
"முதிய பருவத்தில் மனிதன்,
மீண்டும் குழந்தையாக மாறுவான்"
யாரோ சற்று தவறாக சொன்னது இது..
23 வயது குழந்தை நீ,
பழிப்பு காட்டி சிரிக்கும்போது
26 வயதில் மீண்டும் நான்
குழந்தையாகி போகிறேன்..
----------------------------------------------