Friday, May 25, 2012

Marriage Invitation

Marriage Invitation

Monday, July 26, 2010

ஒரு அதிகாலை கனவு


ஒரு சில்லென்ற இளங்காலை பொழுது..
பனியில் குளித்த பச்சைப் புல்வெளி..
குடத்தில் தண்ணீர் ஊற்றும் ஒரு கற்சிலை..
அதன் ஓரமாய் வெளிர் மஞ்சள்
நிற புடவையில் அமைதியாய் அவள்..
இளம் ஆரஞ்சு வண்ண ரோஜாக்கள்
சேர்ந்த பூங்கொத்தை மறைத்து
அவள் முன்னே புன்னகையுடன் நான்..
சற்றே தலை சாய்த்து குருஞ் சிரிப்புடன்
ஆர்வத்துடன் அவள் பார்க்க..
திடீரென ஒரு குரல்..
"அம்மா.. பால்",
அடச்சே! பக்கத்துக்கு வீட்டிற்கு பால் ஊற்றும்
பையன் வழக்கம் போல இன்று
என் கனவுக்கும் பால் ஊற்றிச் சென்றான்..

Monday, July 19, 2010

ஒரு மாலை நேரம்..


ஒரு முன்பனி காலை நேரம்
வானம் மெலிதாய் தூறல் போட,
சற்று நேரம் முன்பு மலர்ந்த
ரோஜா வாசம் மெதுவாய் தீண்ட,
அலுவலகம் விரைந்து செல்லும்
மனிதர்களை சற்றே கடந்து
சாலையில் நடந்து செல்லும் போது
திடீரென்று பாய்ந்து வந்தவன்
சலனமின்றி கேட்டுச் சென்றான்
"என்ன வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"

Friday, May 14, 2010

என்னை போல் ஒருவன்


காலை நேர கூட்ட நெரிசலில்
தோளில் மடிக்கணினி சுமந்து,
நடத்துனரிடம் ஒரு ரூபாய் சில்லறைக்கு
ஒன்பது நிமிடம் சண்டையிட்டு,
அலுப்போடு அலுவலகம் சென்று
பிடிமானம், வருமான வரி என
மாதம் ஒரு முறை சம்பள பட்டியலில்
சில ஆயிரம் ரூபாய்கள்
கேள்வி எதுவுமின்றி
வரி செலுத்தும் அவனை
பார்த்ததும் கண்டுகொண்டேன்..
இவன் என்னை போல் ஒருவன்.
அவனை அழைத்து சொல்ல வேண்டும் - "நீ என் இனமடா!"

Thursday, May 13, 2010

மெல்லிய அதிர்வு மட்டும்


சற்றும் சலனமில்லாத முகம்.
எங்கோ எதையோ தேடும்,
குறுகுறு கருவிழிகளில்,
இனம் புரியா ஒரு ஈர்ப்பு.
பார்வை என் மீது விழுந்ததும்,
சிலநொடி நிலை குத்தி நிற்க,
என்னவென்று வர்ணிக்க
அந்த மின்மினி குருநகையை..
மின்னல் எதுவும் தெறிக்கவில்லை..
வண்ணத்து பூச்சி எதுவும் வட்டமிடவில்லை..
சிறு மெல்லிய அதிர்வு மட்டும்..
இதயத்தின் மையத்தில் இதமாக..

Thursday, August 6, 2009

கேட்டதில் பிடித்தது 1

உறங்கிடும் போதும் விழித்திடும் போதும்
உன் முகம் எதிரில் இருந்தால் போதும்..

உயிர் விடும் போதும்
உன் குரல் கேட்டால்
மரணம் முக்தி பெறும்..

----------------------------------------------
சிரித்திடும் போதும் அழுதிடும் போதும்
உன் விரல் பிடித்து நடந்தால் போதும்

யார் நம்மை எதிர்த்தாலும்
வாழ தோன்றிடும்..

----------------------------------------------
உன்னில் துவங்கி என்னில் முடியும்
மெல்லிய உணர்வுகள் கொடுத்தாய் நீயும்..


தந்தையும் தாயும் சேர்த்து செய்த
தோழன் நீதானே..

----------------------------------------------

Tuesday, April 28, 2009

படித்ததில் பிடித்தது 2

படித்ததில் பிடித்தது..

அடித்துவிட்டு ஓடுகிற குழந்தையைத்
திருப்பியா அடிக்கிறோம்?
ஒரு முத்தம்தானே கொடுக்கிறோம்?
நீ - குழந்தை.
என் காதல் – முத்தம்.

----------------------------------------------------
நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம் ஓடி வருகிறது காதல்.
என்னிடமிருந்து உன்னிடம் ஓடிப் போகிறது என் இதயம்!

----------------------------------------------------
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?

----------------------------------------------------
உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!

----------------------------------------------------
நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!

----------------------------------------------------

-- அருட்பெருங்கோ..